அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் (MUSSD) 1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. சரியான நம்பகமான அளவுகள் நடவடிக்கைமுறைகளையும் எடையளவுகள் ஆய்வு சேவைகள், நுகர்வோரின் தேவைகளைப் பாதுகாத்தல், தேசிய அளவு தரங்களை பேணுதல் மற்றும் இந்த சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டங்கள் என்பவற்றை அமுலாக்குவதன் மூலம் சர்வதேச தரங்கள் முறைமையை உறுதிப்படுத்தி அந்த தரங்களை இற்றைப்படுத்தி தேசிய அளவு தரங்களைப் பேணுதல், நுகர்வோருடைய தேவைகளைப் பாதுகாத்தல், அளவுகள் மற்றும் எடையளவுகள் என்பவற்றை சரியாக வழங்குதல் என்பவை இத் திணைக்களத்தின் பொறுப்பாகும்.
உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய அளவுகள் தரங்களை ஸ்தாபிப்பதற்கும் பேணுவதற்கும், தீர்வுக்கும் சிறப்பான ஸ்தாபிப்பு பொறுப்புகள் உண்டு. இது பொதுவாக தேசிய அளவுகள் நிறுவகம் (NMI) என அழைக்கப்படுகிறது. இலங்கையில் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் (MUSSD) தேசிய அளவுகள் நிறுவகத்திற்கு (NMI) பொறுப்பு வகிக்கிறது. இலங்கையில் தேசிய அளவு தரங்களை ஸ்தாபித்தல், பேணுதல் மற்றும் பரப்புதல் என்பவை திணைக்களத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவுகள் ஆய்வுகூடத்தினால் (தேசிய அளவுகள் நிறுவகம் (NML) மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் கைத்தொழில், பொறியியல், சூழலியல், சுகாதார பாதுகாப்பு, வீதி பாதுகாப்பு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்ற அளவு உபகரணங்களுக்கான பல்வேறு வகையான அளவு திருத்தங்கள் மற்றும் சரிபார்க்கும் சேவைகள் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் (MUSSD) வழங்கப்படுகின்றன.
மேலும் சர்வதேச சட்ட எடையளவுகள் ஆய்வு நிறுவனத்தின் (OIML) பரிந்துரைகள் சட்டரீதியான எடையளவுகள் ஆய்வு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் மின் மற்றும் எந்திரவியல் நிறுத்தல் மற்றும் அளத்தல் உபகரணங்கள் என்பவற்றின் ஆரம்ப மற்றும் வருடாந்த சரிபார்த்தல்கள் அந்த பரிந்துரைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன.
1937ஆம் ஆண்டின் நிறுத்தல் மற்றும் அளத்தல் கட்டளைச்சட்டத்தை வலுவுள்ளதாக்கும் நோக்கத்திற்காக அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டு உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டன. முடியாட்சி காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் அளக்கும் முடியாட்சி முறைமையை வியாபாரிகள் பாரிய அளவில், நீண்ட காலமாக, செறிவுமிக்க கொடுக்கல்வாங்கல்களில் பயன்படுத்துவதை இந்த ஆய்வுகூடம் சரிபார்ப்பதற்கு உபகரணங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வுகூடம் பிரதானமாக 1946ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க மற்றும் அதன் 1971, 1974 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைக் கொண்ட நிறுத்தல் மற்றும் அளத்தல் கட்டளைச் சட்டத்தை வலுவுள்ளதாக்குவதற்கு நிறுத்தல் மற்றும் அளத்தலில் பாரிய, நீண்ட மற்றும் ஆரம்ப செறிவுக்கான இலங்கை தேசிய தரங்களை பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் பணிகள் இந்த ஆய்வுகூடத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. இந்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக இந்த ஆய்வுகூடம் நீண்ட காலமாக வர்த்தக பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்த உள்நாட்டு வர்த்தக அமைச்சின் திணைக்களத்தில் நிறுத்தல் மற்றும் அளத்தல் பிரிவின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது.
இந்தப் பிரிவு 1997ஆம் ஆண்டு முழுமையான திணைக்களமாக (அளவுகள் அலகு தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்) தரமுயர்த்தப்பட்டது.
1974ஆம் ஆண்டு முடியாட்சி காலத்தில் நிலவிய அளவு முறைமைகளை இலங்கை சர்வதேச அளவு முறைமைக்கு (மெட்றிக் முறைமை) மாற்றியது. உள்நாட்டு வர்த்தகத்தில் அளவுகள் அலகு தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் அளவு தரங்கள் மற்றும் சேவைகள் பிரிவுக்கு நாட்டின் மெட்றிக் முறைக்கு மாறறுவதை செயற்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் தலைவரின் தலைமையில் நியதிச்சட்ட நிறுவனமாக மெட்றிக் முறைக்கு மாற்றும் அதிகாரசபை உருவாக்கப்பட்டது. அத்துடன் இந்த நோக்கத்திற்காக 1976ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மெட்றிக் முறைக்கு மாற்றும் சட்டம் உருவாக்கப்பட்டது. 1970 முதல் 1980 வரையிலான காலப்பகுதியில் மெட்றிக் முறைக்கு மாற்றுவதில் மெட்றிக் அளவு தரங்களைக் கொண்டிருந்தது. இந்தத் தரங்கள் இலங்கை தேசிய ஆரம்ப அளவு தரங்களாக இருக்கின்றன.
இலங்கை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அபிவிருத்தி அடையும் நாடாக இருக்கின்றது. இது பாரிய தேசிய தரங்கள் என்ற வகையில் சர்வதேச நிறுத்தல் மற்றும் அளத்தல் (BIPM) பணியகத்திடமிருந்து பெற்ற ஒரு கிலோகிராமின் ஒரு பிரதியை 1975ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெற்றுக்கொண்டதன் மூலம் அளவுகளின் தேசிய தரங்களை ஸ்தாபிப்பதற்கு சரியான நோக்கைக் கொண்டிருந்தது. தேசிய நீள மீட்டர் தரங்கள், தரமான தேசிய நேரத்தையும் நொடியையும் உணர்வதற்கு செசியம் அணு மணிக்கூடு, வெப்ப விசையியல்; தட்ப வெப்ப நிலை அளவை உணர்வதற்கு மும்முனை நீர் கலம், வர்ண செறிவை அளப்பதற்கான தரமான விளக்குகள், நேரடி மின் அலகு கூறை அளப்பதற்கு தரமான வெண்ணீல கல தொகுதி, அளவு திருத்தல் தடுத்தல் தொகுதி, மின் புகுத்தி, மின் தேக்குதிறன், மின்சாரம் மற்றும் வலு என்பவற்றை உணர்த்துவதற்கு Zeman Helium Neon Laser வெப்ப விசையிலை உறுதிப்படுத்தினார்.
1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவு அலகுகள் தரங்கள் மற்றும் சேவைகள் சட்டம் 1995ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டடது. இது தான் தற்பொழுது நாட்டில் உள்ள அளவுகள் சட்டமாகும். இது வர்த்தகம், கைத்தொழில், விஞ்ஞானம், சுகாதாரம், பாதுகாப்பு, மற்றும் சூழலியல் பாதுகாப்பு என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து அளவுகளின் சரியான தன்மை, மிக முக்கியத்துவம் மற்றும் பெறுபேறுகளை அடைதல் என்பவற்றை அடைந்துள்ளது.
இன்று பருமன், நீளம் தட்ப வெப்ப அளவு என்பவற்றிற்காக இந்த திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது பெருமளவில் மின் தரங்கள், நேரம், அலையதிர்வு அளவுகள் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. அனைத்து ஒளி மற்றும் ஒலி செறிவு அளவு திருத்துவதை அளக்கும் கருவிகள் என்பவற்றிற்காக கைததொழில் துறையிலிருந்து கிராக்கி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட, குறிப்பிட்ட கைத்தொழில்களில் பயன்படுத்துகின்ற குறிப்பிட்ட உபகரணங்கள் இருக்கின்றன. இரு கைத்தொழில்களின் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அத்துடன் அளவு திருத்தத்தில் சிறப்பான அளவு கருவிகள் பயன்படுத்தப்பட்டு வழமையாக உத்திகள் மேம்படுத்தப்படுவது திணைக்களத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்கிறது.
இந்தக் காலப்பகுதியில் மேற் குறிப்பிட்ட கருவிகளை இயக்குவதற்குத் தேவையான மென் பொருள் மற்றும் தர தடுப்பு மின் அலகு கூறு, நேர கணிப்பு என்பவற்றை அறிமுகப்படுத்துவதற்கு மின்சார அளவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முன்னணி ஆய்வுகூடங்களுக்கு மதப்பபாராய்தல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இந்தத் திணைக்களத்தின் மற்றுமொரு பணியாகும்.