இது எமது விடயத் தொகுப்பில் துணை பிரிவாகும். இது கைத்தொழில் எடையளவுகள் ஆய்வு எனக் குறிப்பிடப்படுகிறது. இது தயாரிப்பு, ஏனைய நடைமுறைகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் பயன்பாடு, அளக்கும் உபகரணங்களின் பொருத்தமான தன்மை, அவற்றின் பதிப்பாராய்வு மற்றும் அளவுகளின் தர கட்டுப்பாடு என்பவற்றில் அளவு விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இது பதிப்பாராய்வு நடவடிக்கைமுறைகள், பதிப்பாராய்வு இடைவெளிகள் மற்றும் அளவுகள் நடைமுறையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கைத்தொழில்களில் அளக்கும் உபகரணங்களை முகாமைப்படுத்தல் மற்றும் அவர்கள் அவற்றை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான தேவைகளுடன் இணங்கியொழுகுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது.
திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கைத்தொழில் எடையளவு ஆய்வுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
- உள்ளடக்கப்பட்டுள்ள துறைகள்: உற்பத்தி, சுகாதாரம், இறக்குமதி/ஏற்றுமதி போன்வை.
- கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் அளவு உபகரணங்கள் மற்றும் அளவுகள் என்பவற்றிற்கான அளவு திருத்தங்களுக்கான வசதிகளை வழங்குதல்.
- அளவுகள், பதிப்பராய்வுகள், உபகரணங்களைப் பயன்படுத்துல், மற்றும் கைத்தொழில் அளவுகளில் தோன்றும் அளவு பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பவற்றிற்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல்.
- கைத்தொழில் அளவுகளுக்காக சோதனை முறைகள், கருவிகள், அளவு தரங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் தயாரித்தல் மற்றும் வடிவமைத்தல் என்பவற்றிற்கு ஆளணியினரை நெறிப்படுத்துதல்.