small gov

சட்ட பின்னணி மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் நடவடிக்கைமுறை என்பவற்றின் கீழ் வருகின்ற துறைகள் சட்டரீதியான எடையளவு ஆய்வு எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே அது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, சூழல், வரிசெலுத்தும் சாத்தியம், நுகர்வோரையும் நியாயமான வர்த்தகத்தையும் பாதுகாப்பதற்காக அளவுகள் மற்றும் அளக்கும் கருவிகள் என்பவற்றில் கவனம் செலுத்துகின்றது. இவற்றை மனதில் வைத்துக்கொண்டு அளவுகள் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் பேணப்படுகின்றது.

தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின், அளவுகள் அலகினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இந்த விடயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள சட்டரீதியான எடையளவுகள் ஆய்வுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளில் தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

இது பின்வரும் பகுதிகளில் சட்டரீதியான அளவு முறைமைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு திணைக்களத்திற்கு வலுவூட்டுகிறது: -

  • மாவட்ட அடிப்படையில் சரிபார்க்கும் நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் நடத்தப்படுகின்ற தரங்களை ஒப்பீடுசெய்தல்.
  • நிறுக்கும் மற்றும் அளக்கும் கருவிகளை ஆரம்பத்தில் சரிபார்த்தல் அதன் பின்னர் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுதல்.
  • வியாபாரத்தில் பயன்படுத்தப்படுகின்ற நிறுக்கும் மற்றும் அளக்கும் கருவிகளைப் பழுதுபார்ப்பவர்களையும் தயாரிப்பவர்களையும் நிருவகித்தல்.
  • சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை விதிப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாத்தல்.
  • அளவு முறைமைகளில் உள்ள சட்ட தன்மையை நுகர்வோருக்கு கற்பித்தல்.
  • வர்த்தகம் மற்றும் கைத்தொழில்களில் பயன்படுத்துகிற நிறுக்கும் மற்றும் அளவு உபகரணங்களின் மாதிரி வகைகளுக்கு அனுமதி வழங்குதல்.
  • முற்கூட்டியே பொதிப்படுத்தப்பட்டுள்ள நுகர்வு பொருட்களை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
  • வீதி பாதுகாப்பு, சூழலியல் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகள் என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்ற அளக்கும் உபகரணங்களின் பணிப்பாணை ரீதியான அளவு திருத்தல்.