நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை தயாரிக்கும், இறக்குமதி செய்யும், விற்பனை செய்யும் மற்றும் நிறுத்தல், அளத்தைலை பழுதுபார்க்கும் ஒவ்வொரு நபரும் அமைப்பும் 1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிய பதிவு மற்றும் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல் என இரண்டு வகையான பதிவுகள் உண்டு. ஒவ்வொரு பதிவுக்கும் நான்கு வகை உண்டு.
- பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம்
- தயாரிப்பாளர் அனுமதிப்பத்திரம்
- இறக்குமதி மற்றும் விற்பனை அனுமதிப்பத்திரம்
- விற்பனை அனுமதிப்பத்திரம்
மேற் குறிப்பிட்ட அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு அனுமதிப்பத்திரமும் சம்பந்தப்பட்ட வருடத்தில்; ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.