small gov

சட்ட அளவியல் அவுகளின் சட்ட கட்டுப்பாட்டுத் துறையில் கவனம் செலுத்துகின்றது. அளக்கும் உபகரணங்களின் பயன்பாடு பற்றிய சட்ட ரீதியான தேவைகளுக்கு அமைவாக அத்தகைய கருவிகளையும் அளவுகளையும் பரிசோதித்ததன் பின்னர் நாட்டின் அளவுகள் சட்டத்தை இணங்கியொழுகி அளக்கும் உபகரணங்களின் அளக்கும் நடவடிக்கைமுறையை சான்றுப்படுத்துகிறது. அத்தியாவசிய சட்ட ஏற்பாடுகள் 1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சட்டத்தின் வழியாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக, இயற்றப்பட்ட சட்டமும் ஒழுங்குவிதிகளும் சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, சூழலியல், வரிவிதிப்பை சாத்தியமாக்குதல், நுகர்வோரையும் நியாய வர்த்தகதையும் பாதுகாத்தல் என்பவற்றின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்றது.

அளவு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற சட்ட அளவியலின் கீழ் உள்ள நடவடிக்கைகள் சட்டத்திலும் அதன் ஒழுங்குவிதிகளிலும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தக கொடுக்கல்வாங்கல்களில் காணப்படுகின்ற நிறுத்தல் மற்றும் அளத்தல் அளவுகள் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. சட்ட அளவியல் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு இந்த சட்டம் திணக்களத்திற்கு வலுவூட்டுகிறது. அத்துடன், இந்த வலுவூட்டல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு திணைக்களத்தினால் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள 22 மாவட்ட அலுவலகங்கள் ஊடாக நாட்டின் சட்ட அளவியல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

செயற்பாடுகள்

  • வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகின்ற நிறுத்தல் மற்றும் அளத்தல், நிறுக்கும் மற்றும் அளக்கும் உபகரணங்கள் என்பவற்றை ஆரம்பத்திலும் வருடாந்தமும் சான்றுப்படுத்துததல்
  • சட்டத்தின் தண்டனை பிரிவை அமுல்படுத்துவதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாத்தல்
  • சட்ட அளவியல் பற்றி நுகர்வோருக்கு அறிவூட்டுதல்
  • முற்கூட்டியே பொதிப்படுத்தப்பட்ட பொருட்களை பரிசோதித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
  • சுகாதார துறை, சூழல் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்பு அளக்கும் கருவிகளை சான்றுப்படுத்துதல்
  • சந்தை சுற்றி வளைப்பை நடத்துவதன் மூலம் அளவுகளில் மோசடி செய்கின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்