புதிய பழுதுபார்ப்பவரை பதிவுசெய்தல்
தகுதி
பழுதுபார்ப்பவர் அனுமதிப்பத்;திரத்தைப் பெற விரும்பும் தனிநபர்Æமுகவர் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற கோட்பாட்டு மற்றும் செயல்முறைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அனுமதிப்பத்திரங்கள் எந்திரவியல்; பழுதுபார்த்தல் மற்றும் இலத்திரனியல் பழுதுபார்த்தல் ஆகிய வகைகளின் கீழ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
- எடைகள்; மற்றும் அளவுகள்
- வளை தராசு மற்றும் எடைகள்
- சுருள் தராசு
- மேடை தராசு (எந்திரவியல்)
- கருமபீட தராசுகள்
- நிறுக்கும் பாளங்கள் (இலத்திரனியல் மற்றும் எந்திரவியல்)
- நிறுக்கும் பாளத்தைத் தவிர்த்து இலத்திரனியல் நிறுக்கும் உபகரணம்
- ஏனைய மேலதிக தயாரிப்புகள்
அடிப்படை தேவை
- புதிய பதிவுக்கான கோரிக்கை படிவம்
- சான்றுப்படுத்தப்பட்ட தே.அ.அ. பிரதி
- கல்வி மற்றும் தொழில்நுட்ப சான்றிதழ்
அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை
-
படிநிலை 1: விண்ணப்பதாரர் அனுமதிப்பத்திரத்தின் எந்த வகை தேவை என்பதைக் குறிப்பிட்டு புதிய பதிவுக்காக கோரிக்கை படிவமொன்றைத் தயாரித்து அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
-
படிநிலை 2: திணைக்களம் பணிமனை அறிக்கைக்காக மாவட்ட பிசோதகருக்கு கடிதத்தை அனுப்பும்.
-
படிநிலை 3: மாவட்ட பரிசோதகர் விண்ணப்பதாரரின் பணிமனைக்கு வெளிக்கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு அந்தப் பணிமனையில் கருவிகளைப் பழுதுபார்ப்பதற்குப் பொருத்தமான ஆயுதங்கள் உண்டா என்பதை பரிசோதிப்பார்.
-
படிநிலை 4: மாவட்ட பரிசோதகர் பணிமனை அறிக்கையொன்றைத் தயாரித்து அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பார்.
-
படிநிலை 5: திணைக்களம் பரீட்சையொன்றுக்குத் தோற்றும்படி விண்ணப்பதாரருக்கு கடிதமொன்றை அனுப்பும்.
-
படிநிலை 6: திணைக்களம் விண்ணப்பதாரருக்காக கோட்பாட்டு மற்றும் செயல்முறை பரீட்சையை நடத்தும்.
-
படிநிலை 7: விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப திறனை பரிசோதிப்பதற்காக ஒரு பரீட்சை நடத்தப்படும்.
-
படிநிலை 8: விண்ணப்பதாரர் வெற்றிகரமாக சித்தியடைந்தால் அவருக்கு பழுதுபார்ப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
கட்டணங்கள்
Registration fee for a Repairer |
Rs. |
Repair measures |
720.00 |
Repair scale beams & Weights |
720.00 |
Repair spring balance |
720.00 |
Repair Platform Scales (mechanical) |
720.00 |
Repair counter scale |
720.00 |
Repair weighbridges (Mechanical or Electronic) |
6000.00 |
Repair all types of mechanical weighing instruments Exept Weighbridge |
3600.00 |
Repair electronic weighing instruments Exept Weighbridge |
3600.00 |
Class II scales |
720.00 |
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்க
புதிய தயாரிப்பு மற்றும் விற்பனை பதிவு
தகுதி
அளக்கும் உபகரணங்களுக்காக மாதிரி அங்கீகாரம் பெற்றுள்ள எந்த தயாரிப்பாளரும்.
குறிப்பு: பதிவுச் சான்றிதழ் வைத்திருக்கும் ஒவ்வொரு எடை அளவு அல்லது நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணத்தைத் தயாரித்த நபர் அல்லது நிறுவனம் பரிசோதகரால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
அடிப்படை தேவைகள்
-
புதிய பதிவுக்கான கோரிக்கை படிவம்
-
தேசிய அடையாள அட்டையின் பிரதி
-
மாதிரி அங்கீகார சான்றிதழ்
-
வியாபார பதிவு சான்றிதழ் (டீசுஊ)
-
பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம்
அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை
-
படிநிலை 1: தயாரிப்பாளர் புதிய பதிவுக்காக என்ன தயாரிக்கப்படுகிறது மற்றும் தயரிப்பாளரின் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு திணைக்களத்திற்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்ப வேண்டும்.
-
படிநிலை 2: அதன் பின்னர் மாவட்ட பரிசோதகர் வெளிக்கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு பணிமனை அறிக்கையொன்றைத் தயாரிப்பார். மாவட்ட பரிசோதகர் வெளிக்கள விஜயத்தை மேற்கொண்டு பரிசோதனை செய்து பின்னர் பணிமனை அறிக்கையைத் தயாரிப்பார்.
-
படிநிலை 3: பரிசோதகர் பணிமனை அறிக்கையை திணைக்களத்திற்கு முன்வைப்பார்.
-
படிநிலை 4: பரிசோதகர் பணிமனை அறிக்கையை அங்கீகரித்தால் திணைக்களம் மாதிரியைக் கொண்டு பரும்படி தயாரிப்பாளருக்கு கடிதமூலம் அறிவிக்கும்.
-
படிநிலை 5: தயாரிப்பாளர் மாதிரியைக் கொண்டு வருவார் அது திணைக்களத்தினால் பரிசோதிக்கப்படும்.
-
படிநிலை 6: மாதிரி அங்கீகரிக்கப்பட்டவுடன் திணைக்களம் கடித மூலம் தயாரிப்பாளருக்கு விண்ணப்பப்படிவத்தை அனுப்பும்.
-
படிநிலை 7: தயாரிப்பாளர் பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம் வைத்துள்ள தொழில்நுட்ப நிபுணரை அறிமுகப்படுத்த வேண்டும்.
-
படிநிலை 8: பின்னர் தயாரிப்பாளர் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்து செலுத்திய முத்திரையை ஒட்டி, வங்கி பண வைப்பு துண்டு அல்லது காசாளருக்கு செலுத்திய பற்றுச் சீட்டை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் அல்லது நேரடியாக திணைக்களத்தில் கையளிக்க வேண்டும்.
-
படிநிலை 9: அதன் பின்னர் திணைக்களம் தயாரிப்பு சான்றிதழை வழங்கும்.
கட்டணங்கள்
Registration fee for manufacture & sell |
RS. |
Measures of Length or Capacity made out of Wood or Metal |
1200.00 |
Weights |
2400.00 |
Beam Scale |
2400.00 |
Spring Balance |
2400.00 |
Counter Balance |
2400.00 |
Platform Scales (mechanical) |
2400.00 |
Weighbridges (Mechanical/Electronics) |
9000.00 |
Electronic Weighing instrument |
3600.00 |
Fuel dispensing pumps |
3600.00 |
Measuring instruments related to electrical energy |
3600.00 |
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்க
புதிய இறக்குமதி மற்றும் விற்பனை பதிவு
தகுதி
குறிப்பு : தனிநபரால் அல்லது நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட பதிவு சான்றிதழ் வைத்திருக்கும் ஒவ்வொரு எடை அளக்கும் அல்லது நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணம் பரிசோதகரால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
அடிப்படை தேவைகள்
- புதிய பதிவுக்கான கோரிக்கை படிவம்
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம்
- சுங்க ஆவணம்
அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை
- படிநிலை 1: விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவம் தேவை என்பதைக் குறிப்பிட்டு திணைக்களத்திற்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்ப வேண்டும்.
- <strong ">படிநிலை 2: திணைக்களம் கடிதத்தைப் பெற்றதும் விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கும்.
- <strong ">படிநிலை 3: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதி, சுங்க ஆவணத்தின் பிரதி மற்றும் தேசிய அடையாள அட்டைÆகடவுச்சீட்டு பிரதி என்பவற்றுடன் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
- <strong ">படிநிலை 4: திணைக்களம் விற்பனையாளருக்கு அனுமதிப்பத்திரத்தை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கும்.
கட்டணங்கள்
Registration fee for Import & Sell |
Rs. |
Measures of Length or Capacity made out of Wood or Metal |
2400.00 |
Weight |
4800.00 |
Beam Scales |
4800.00 |
Spring Balance |
4800.00 |
Counter Balance |
4800.00 |
Platform Scale (meachanical) |
4800.00 |
Weighbridge (Mechanical/Electronics) |
18000.00 |
Electronic weighing instrument |
7200.00 |
Fuel dispensing |
7200.00 |
Measuring instrument related to electrical quantities |
7200.00 |
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்க
புதிய இறக்குமதி மற்றும் விற்பனை பதிவு
தகுதி
வியாபார ஸ்தாபனமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பு : அதிகாரம் பெற்ற எடை, அளவுகள் அல்லது நிறுத்தல் அல்லது அளத்தல் உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அல்லது விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதற்கு பதிவு சான்றிதழை வைத்திருக்கும் தனிநபர்; அல்லது நிறுவனம் எடை, அளவுகள் அல்லது நிறுத்தல் அல்லது அளத்தல் உபகரணங்களுக்கு பரிசோதகரால் முத்திரையிடப்பட்டதன் பின்னரே வைத்திருக்க முடியும். பரிசோதகரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் கொள்வனவாளருக்கு வழங்கப்படும்.
அடிப்படை தேவைகள்
- புதிய பதிவுக்கான கோரிக்கை படிவம்
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- வியாபார பதிவு சான்றிதழ் (டீசுஊ)
அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை
- படிநிலை 1: விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவம் தேவை என்பதைக் குறிப்பிட்டு திணைக்களத்திற்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்ப வேண்டும்.
- படிநிலை 2: திணைக்களம் கடிதத்தைப் பெற்றதும் விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கும்.
- படிநிலை 3: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதி, சுங்க ஆவணத்தின் பிரதி மற்றும் தேசிய அடையாள அட்டைÆகடவுச்சீட்டு பிரதி என்பவற்றுடன் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
- படிநிலை 4: திணைக்களம் விற்பனையாளருக்கு அனுமதிப்பத்திரத்தை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கும்.
கட்டணங்கள்
Registration fee for Sell |
Rs. |
Weights, measures or weighing and measuring instruments |
720.00 |
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்க