செலவு
அபராதம்
- குற்றங்கள் மற்றும் தண்டனை பிரிவைப் பார்க்கவும்.
சட்டத்தை மீறியது பற்றிய முறைப்பாடு
எவரேனும் ஒரு நபரைப் பற்றி தகவல் அல்லது சாட்சியம் வைத்திருக்கும் ஒரு நபர், ஏதேனும் ஓர் இடம் அல்லது பிரதேசம், எதுவாக இருந்தாலும் எப்படி இருந்தாலும், இலக்கம், தொகை, அளவு, அவர்களுடைய கொள்வனவுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு பொருளின் தடிப்பு அல்லது எடை, விற்பனை, நிறுத்தல் அல்லது அளத்தல் அல்லது எடை அல்லது அளவு தொடர்பாக வழங்கப்பட்ட சேவைக்கான ஏதேனும் விதிப்புகள், கணிப்பிடல் அல்லது விற்பவர், அல்லது விற்பதற்கான அல்லது விநியோகிப்பதற்கான காரணம், அல்லது கொள்வனவாளருக்கு எடை அளவு எண்ணிக்கை குறைவு பற்றி விற்பனையாளரால் அல்லது அவருடைய முகவரால் விநியோகித்தற்கான காரணம், பிழையாக அல்லது பொய்யாக பிரகடனப்படுத்தல் அல்லது கூற்றை வெளியிடல். வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிற சரியாக இல்லாத ஏதேனும் எடை அல்லது அளவு அல்லது நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணம். இவை கீழே குறிப்பிடப்பட்ட சேவைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்
நடைமுறை (பொதுமக்களின் முறைப்பாடுகளைக் கையாள்தல்)
- படிமுறை 1: கடிதம், தொலைபேசி, தொலைநகல் ஊடாக அல்லது அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரை சந்தித்து பொதுமக்கள் செய்யும் முறைப்பாடுகள்.
- படிமுறை 2: திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டால், பணிப்பாளர் அந்த முறைப்பாட்டை கீழுள்ளவருக்கு முன்வைப்பார்.
- படிமுறை 3: உதவி அத்தியட்சர் பின்னர் அதை குறித்த மாவட்ட செயலகங்களின் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் அரசாங்க அதிபருக்கு அறிவிப்பார்.
- படிமுறை 4: அரசாங்க அதிபர் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (OIC) அறிவிப்பார்.
- படிமுறை 5: நிலையப் பொறுப்பதிகாரியும் பரிசோதகரும் கள விஜயத்தை மேற்கொண்டு திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
- படிமுறை 6: முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட நபர்கள் குற்றவாளியாகக் காணப்பட்டால், அரசாங்க அதிபர் அந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்துவார்.
குறிப்பு 1: சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களின் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் அரசாங்க அதிபருக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும். அவர் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிப்பார்.
குறிப்பு 2: அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்தவரின் பெயர் தெரியுமானால் இறுதி முடிவு அவருக்கு அறிவிக்கப்படும்.
காலம்
- நடவடிக்கை காலம் :- 1 - 4 வாரங்கள்
தேவைப்படும் துணை ஆவணங்கள்
இந்த விசேட சேவைக்கு துணை ஆவணங்கள் தேவையில்லை. சாத்தியமானால் முறைப்பாடு செய்யும் பிரசைகள் சாட்சயங்களையும் தகவல்களையும் வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.