small gov

எடைகள், அளவுகள் மற்றும் நிறுத்தல் அல்லது உபகரணங்களுக்கான மாதிரி அனுமதியைப் பெறுக

எடைகள், அளவுகள் மற்றும் நிறுத்தல் அல்லது உபகரணங்களுக்கான மாதிரி அனுமதி

அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் OIML தரங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட எடைகள், அளவுகள் மற்றும் நிறுத்தல் அல்லது அளத்தல் உபகரணங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.

எவ்வாறாயினும் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கைக்கு மட்டும் பொருத்தமான OIML தரங்களைத் தெரிவுசெய்து பயன்படுத்துகிறது.

தகுதி

இந்த சேவையைப் பெற விரும்பும் ஒரு தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளர் பின்வரும் அளவுகோலைக் கொண்டிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும்
  • இறக்குமதி செய்யப்பட்ட உபகரமொன்யை அங்கீகரிக்கும் விடயத்தில், அனை விற்பனை செய்கின்ற கம்பெனி அல்லது தனிப்பட்டவர் தயாரித்த கம்பெனியுடன் அதிகாரம் பெற்ற முகவராக இருக்கிறார் என்பது அடையாளம் காணப்பட வேண்டும்.

குறிப்பு : விண்ணப்பதாரருக்கு பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டால் அவர் ஒரு அனுமதிப்பத்திரத்தைப் பெற முத்திரையிடப்பட்ட அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அளக்கும் உபகரணம்/ கருவிக்கான அங்கீகரிக்கும் நடைமுறை

பரிசோதனை உபகரணங்களின் சட்டரீதியான கட்டுப்பாட்டுக்காக பொது அளவியலும் சட்ட தேவைகளும்

பரிசோதனை உபகரணங்களின் சட்டரீதியான கட்டுப்பாட்டுக்காக பொது அளவியலும் சட்ட தேவைகளும் அளவுகள் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் (MUSSD) அத்தனை மாதிரி அங்கீகாரம், ஆரம்ப சரிபார்த்தல் மற்றும் காலத்துக்குக் காலம் சரிபார்த்தல் என்பவற்றிற்கான அளக்கும் உபகரணங்களின் அளத்தல்களின் சட்ட கட்டுப்பாட்டுகாகத் தேவைப்படும் அத்தனை பண்புகளும் அளக்கும் உபகரணத்தில் சேர்க்கப்படுதல் வேண்டும். அது பின்வருமாறு அமைகிறது;

  • அளவுகளைப் பாதிக்கின்ற உள்ளக ஆக்கக்கூறுகள், பௌதிக, மின்சுற்று மற்றும் எந்திரவியல் பாகங்கள் பௌதிக ரீதியில் முத்திரையிடப்படுதல் வேண்டும்.
  • அளவு பெறுபேறுகளுக்கு முடிவை ஏற்படுத்துகிற அளவு திருத்தம் மற்றும் அளவுருக்களின் மாற்றம் 1.1க்கு அமைவாக பௌதிக துளையிடும் கருவி அல்லது உள் ஆளி முத்திரையை உடைக்காமல் அல்லது மென்பொருள்/வன்பொருள் அணுக முடியாததோடு அளவு திருத்தம், அளவு திருத்த கூறளவை பலமுறை மாற்றுதல், இலங்கை நேர தரத்திற்கு அமைவாக வருடம் - மாதம்- திகதி மணி: நிமி: நாழிகை மற்றும் ஏனைய கூறளவு செலவு வீதங்கள், திருத்தும் காரணிகள், தொடர்ச்சி... போன்றவை கடவுச் சொல் எதுவும் இன்றி வாசிக்கக்கூடியதாக இருத்தல்.
  • அளக்கும் உபகரணங்கள் அளவு திருத்த தரங்களைக் கண்டறிவதற்கான அளவின் தேவைப்படும் பரப்பு மற்றும் சரியான தன்மை மற்றும் அளவு திருத்தும் விபர அட்டையை அல்லது காட்சிப்படுத்தலை பரிசோதித்தல் மற்றும் அளவு திருத்தும் திகதிகளை இடுதல். அளவு திருத்தல் காலாவதியானால் அளவு உபகரணத்தின் அளக்கும் செயற்பாடுகள் தடுக்கப்படுதல் வேண்டும். அத்துடன் அதன் நிலை தெளிவாக குறிக்கப்படுதல் வேண்டும்.
  • வருடாந்த கண்டறியும் அளவு தரங்களை உறுதிப்படுத்துவதற்கு 3 மாத இடைவெளியில் உடனடி பரிசோதனை நடத்தப்படுதல் வேண்டும். அத்துடன் மேற் குறிப்பிட்ட நோக்கத்திற்காக போதியளவு கண்டறியும் அளவு தரங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது. சரியான பராமரிப்பு அட்டவணை பின்பற்றப்படுதல் வேண்டும். தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் பொருட்கள் பராமரிப்பு பணிகளுக்காக கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது. மேற் குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் சரியாக ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.
  • சரியான முறையில் உபகரணத்தை இயக்குபவர் அடையாளம் காணப்படுதல் வேண்டும். (கடவுச் சொற்கள், சுகு அட்டைகள், விரல் அடையாளம போன்றவை...) இறுதி அளவு பெறுபேறுகளுக்கு இயக்குபவரின் தலையீடு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்போது உபகரணத்தின் ஒரே விதமான அடையாளம் காணல் (தொடர் இலக்கம் போன்றவை) மற்றும் அளவு திருத்தம்Æசரிபார்த்தல் திகதி என்பவற்றை அடையாளம் காண்பதற்கு சரியான முறை இருக்க வேண்டும். மேற் குறிப்பிட்ட விபரங்களை இறுதி அளவு பெறுபேறுகளில்; காண முடியும்.
  • அளவு தரத்துடன் அளவு திருத்தும் கூறளவு மற்றும் ஏனைய கடுமையான கூறளவுகள் (கட்டண வீதங்கள், திருத்தும் காரணிகள், தொடர்ச்சியானவை போன்றவை....) மேற் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வசதியான கணக்காய்வு விபரபட்டியல்/காட்சிப்படுத்தல் என்பவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அளக்கும் உபகரணத்தின் மென்பொருள பொதுவான செயற்பாட்டு முறைமையில் (OS) செயற்படுத்த முடியும். ஆனால் அளக்கும் உபகரணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மென்பொருளின் ஊடாக செல்லாமல் ஏனைய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. மென்பொருள் சட்டரீதியான கட்டுப்பாட்டுக்கான அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது. மென்பொருளின் அடையாளம் அதன் இலக்கம்/இலக்கத்தின் மீளாய்வு கிடைக்கின்றது. அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளுக்கு மாற்றங்கள் செய்வது போதியளவு பௌதிகÆமென்பொருள் விடயத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.